கொத்து மல்லி பிளப்பான்
கொத்துமல்லியை
விதைப்பதற்கு முன்போ அல்லது சுவாச புத்துணர்ச்சி பொருளாக மாற்றுவதற்கு
முன்போ, இரண்டாக பிளக்க வேண்டும். வழக்கமாக இது கையில் உடைக்கப்படும்.
ஆனால் இது ஒரு சிரமமான மற்றும் இதனால் அதிகமாக சேதம் ஏற்படும். எனவே இதனை
இயந்திரமாக்குதல் அவசியம் ஆகும். எனவே கொத்துமல்லியை உடைப்பதற்கு CIPHET
ஒரு இயந்திரத்தை வடிவமைத்து உருவாக்கியுள்ளது. இது 1 HP மோட்டாரால்
இயக்கப்படும். இது ஒரு மணி நேரத்திற்கு 60-80 கிலோ கொத்துமல்லியை
பிரித்தெடுக்கும். 6.5 செமீ விட்டம் மற்றும் 10 செமீ நீளம் உடைய இரண்டு
உருளைகள், இந்த இயந்திரத்தில் இருக்கும். இந்த இரு உருளைகளும் மாறுபட்ட
வேகத்தினால் இயக்கப்படும். இதனால் கொத்தமல்லி இரண்டாக உடைக்கப்படும்.
கொத்துமல்லியில் 14.2 (%) ஈரப்பதம் இருக்கும் நிலையில் இயந்திரம் அதனை
இரண்டாக பிளக்கும்.
மேலும் தகவலுக்கு
மத்திய அறுவடைபின் சார் பொறியியல் மற்றம் தொழில்நுட்ப நிறுவனம் ( லுதியானா, 141004 (பஞ்சாப்)
தொலைபோசி: 91-161-2308669 (அ); 91-161-2305674 (நிறுவனர்)
பேக்ஸ்: 91-161-2308670
மின் அஞ்சல் : ciphet@sify.com
இணையதளம்: http://www.ciphet.in
Refarence to : CDAC
இணையதளம் : www.indg.in