Monday 10 December 2012

கொத்து மல்லி பிளப்பான்

கொத்து மல்லி பிளப்பான்

கொத்துமல்லியை விதைப்பதற்கு முன்போ அல்லது சுவாச புத்துணர்ச்சி பொருளாக மாற்றுவதற்கு முன்போ, இரண்டாக பிளக்க வேண்டும். வழக்கமாக இது கையில் உடைக்கப்படும். ஆனால் இது ஒரு சிரமமான மற்றும் இதனால் அதிகமாக சேதம் ஏற்படும். எனவே இதனை இயந்திரமாக்குதல் அவசியம் ஆகும். எனவே கொத்துமல்லியை உடைப்பதற்கு CIPHET ஒரு இயந்திரத்தை வடிவமைத்து உருவாக்கியுள்ளது. இது 1 HP மோட்டாரால் இயக்கப்படும். இது ஒரு மணி நேரத்திற்கு 60-80 கிலோ கொத்துமல்லியை பிரித்தெடுக்கும். 6.5 செமீ விட்டம் மற்றும் 10 செமீ நீளம் உடைய இரண்டு உருளைகள், இந்த இயந்திரத்தில் இருக்கும். இந்த இரு உருளைகளும் மாறுபட்ட வேகத்தினால் இயக்கப்படும். இதனால் கொத்தமல்லி இரண்டாக உடைக்கப்படும். கொத்துமல்லியில் 14.2 (%) ஈரப்பதம் இருக்கும் நிலையில் இயந்திரம் அதனை இரண்டாக பிளக்கும்.splitter

மேலும் தகவலுக்கு
மத்திய அறுவடைபின் சார் பொறியியல் மற்றம் தொழில்நுட்ப நிறுவனம் ( லுதியானா, 141004 (பஞ்சாப்)
தொலைபோசி: 91-161-2308669 (அ); 91-161-2305674 (நிறுவனர்)
பேக்ஸ்: 91-161-2308670
 
மின் அஞ்சல் : ciphet@sify.com
இணையதளம்: http://www.ciphet.in

Refarence to : CDAC
 இணையதளம் : www.indg.in

தேவையற்ற பிளாஸ்டிக் பாட்டிலை உபயோகித்து நாற்றங்கால் தயாரித்தல்

தேவையற்ற பிளாஸ்டிக் பாட்டிலை உபயோகித்து நாற்றங்கால் தயாரித்தல்


          
- திரு. சஞ்சய் பயேல்,ஜவகர் தல், தானே
  1. காலியான தேவையற்ற 2 லிட்டர் கொள்ளளவு கொண்ட பாட்டிலை, நீள் வாட்டத்தில் வெட்டி, நெல் நாற்றை வளர்பதற்கு உபயோகப்படுத்தலாம்.
  2. பாட்டிலின் இந்த பாதி பகுதியை, வண்டல் மண், மண்புழு உரம் மற்றும் நெல் உமியை 3:2:1 விகித கலவையை கொண்டு நிரப்ப வேண்டும்.  தோராயமாக, ஒரு பாதி பாட்டிலுக்கு, 300 கிராம் கலவை தேவைப்படும்.
  3. அமிர்தபாணி/பிஜாம்ரூத்துடன் (இயற்கை உரங்கள்) நேர்த்தி செய்யப்பட்ட விதையை இந்த பாட்டிலில் உள்ள படுக்கையில் விதைக்க வேண்டும்.  ஒவ்வொரு படுக்கையிலும், 10 கிராம் விதையை விதைக்க வேண்டும்.
  4. இரண்டு நாட்களுக்கு ஒரு முறை, நீர் ஊற்றி விதை படுக்கைகளை ஈரப்பதத்துடன் வைத்திருக்க வேண்டும்.
  5. நாற்றுகள், பத்து தினங்களில், நடுவதற்கு தயாராகிவிடும். ஒரு ஹெக்கடரில் நடுவதற்கு, பின்வருபவை தேவையானவை;
     - காலிபாட்டில் எண்ணிக்கை
           (பாதியாக வெட்டப்பட்டவை) -  625
      - விதை                            -   6.3 கிலோ
      - வண்டல் மண்                -  93.8 கிலோ
      - மண்புழுஉரம்                 -  62.5 கிலோ
      - சாம்பல்                         -   31 கிலோ
     - தயாராகும் நாற்றுகள்     -  2,00,000
இந்த முறையை, நகரத்தின் அருகாமையில் உள்ள கிராமங்களில் இடம் மற்றும் வேலையாட்கள் நெருக்கடியான தருணத்தில் உபயோகிக்கலாம்.
மூலம்
இயற்கை சாகுபடி முறைகள்,
தொழில்நுட்ப கூட்டுறவு திட்டம்,FAO, நியுடெல்லி மற்றும் NCOF  , காசியாபாத்.
தயாரித்தது
மகாராஷ்டிர இயற்கை விவசாய குழு (MOFF)

thank to : www.indg.in

Wednesday 6 June 2012

TNAU தென்னை டானிக்

TNAU  தென்னை டானிக்

தென்னைக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் மற்றும் வளர்ச்சி ஊக்கிகள் கலந்த டானிக்

பயன்கள்
  • பச்சையம் அதிகரிக்கும்
  • ஒளிச்சேர்க்கை திறன் கூடும்
  • பாளைகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்
  • குரும்பை கொட்டுதல் குறையும்
  • காய்கள் பெரிதாகி பருப்பு எடை கூடும்
  • விளைச்சல் 20 சதம் வரை அதிகரிக்கும்
  • பூச்சி, நோய் எதிர்ப்பு சக்தி கூடும்
Coconut Tonic


பயன்படுத்தும் முறை
  • ஒரு வருடத்திற்கு இரண்டு பாக்கெட் (200 மி.லி.) டானிக்கை 6 மாத இடைவெளியில் வேர் மூலம் கொடுக்க வேண்டும்.


மேலும் விபரங்களுக்கு
பேராசிரியர் மற்றும் தலைவர்
பயிர் வினையியல் துறை
பயிர் மேலாண்மை இயக்ககம், கோயம்புத்தூர் – 641 003
தொலைபேசி: 0422 - 6611243 மின் அஞ்சல் : physiology@tnau.ac.in

Tuesday 7 February 2012

இயற்கை வேளாண்மை செய் முறை வீடியோ


                                    இயற்கை வேளாண்மை செய் முறை  வீடியோ

Wednesday 1 February 2012

தலைகீழாய் வளரும் தக்காளி

பொதுவாக தக்காளி செடியின் வேர் கீழ் நோக்கியும் தண்டு பகுதி புவி ஈர்ப்பு விசையை எதிர்த்து மேல் நோக்கியும் வளர்வது வழக்கம். இதுவே தக்காளியை மேலிருந்து கீழ்நோக்கி வளர்த்தால் எப்படி இருக்கும்?
இந்த முயற்சியைத்தான் “டாப்சி டர்வி’ என்ற நிறுவனம் முயற்சி செய்து பார்த்து, அவ்வாறு வளர்ப்பதற்கு தேவையான தொட்டியையும் வடிவமைத்து அமெரிக்க சந்தையில் விற்பனை செய்துவருகிறது.


ஒரு செடி கீழிருந்து மேல்நோக்கி வளரும்போது அது நீர் மற்றும் மண்ணிலிருந்து உறிஞ்சும் சத்துக்களை புவி ஈர்ப்பு விசையை எதிர்த்து கீழிருந்து மேல்நோக்கி அனுப்ப வேண்டியுள்ளது. எனவே செடியை மேலிருந்து கீழ்நோக்கி வளர்க்கும்போது உணவு பொருளானது புவி ஈர்ப்பு விசையை நோக்கி கீழே பாய்ந்து காய் பகுதிகளை நோக்கி செல்வதால் விளைச்சல் அதிகம் இருக்கும் என்கிறது அந்த நிறுவனம்.
அது மட்டுமின்றி செடி மேலே வளர்வதால் புழு மற்றும் நோய் பாதிப்பு பெருமளவு குறைகிறது என்கிறார்கள்.
நகர்புறங்களில் patio மற்றும் பால்கனிகளில் செடி வளர்ப்பதற்கு ஏற்ற அமைப்பு இது.
நான் இந்த செடி வளர்ப்பு தொட்டியை வீட்டில் வளர்த்து சோதனை செய்து பார்த்தேன். தக்காளி செடி நன்றாகவே வளர்கிறது. என் வீட்டு கொல்லை பகுதியில் வெயில் குறைவாக கிடைப்பதால் இதன் உண்மையான விளைச்சலை என்னால் கணிக்க முடியவில்லை.
ஆரம்ப காலங்களில் அடிக்கும் வேகமான காற்று இந்த செடியின் தண்டினை முறிக்க வாய்ப்பு உள்ளது. நான் வளர்த்தபோது ஒரு செடியின் தண்டு சிறிது முறிந்தாலும் அது தொடர்ந்து வளர்ந்து, அந்த கிளைகளில் காய்களையும் வைத்தது.
அமெரிக்காவில் நிறைய பேர் பால் கேனை மேலே கட்டி தொங்கவிட்டு இது போன்றே தக்காளி வளர்த்து முயற்சி செய்துள்ளனர்.
இதுபோன்ற மாதிரிகளை உருவாக்குவதும் மிக எளிது. உர சாக்கு பையை கிழித்து வட்ட வடிவில் தைத்து இதே போன்ற பிளான்டர்களை எளிதாக நாமே உருவாக்கலாம்.
இதே முறையில் நிறைய செடி வளர்க்கவும் புதிய வகை மாதிரிகளை எளிதில் உருவாக்கலாம்.
இந்தியாவில் இதுபோல் புதிய மாதிரிகளை வடிவமைத்து, உற்பத்தி செய்து விற்றால் உற்பத்தி செய்பவருக்கு பணமும் கிடைக்கும். மக்களும் வீட்டிலேயே காய்கறி வளர்க்க வாய்ப்பும் கிடைக்கும்.
முக்கியமாக கிராமப்புற சுய உதவி குழுக்கள் மூலம் இதை உற்பத்தி செய்வதன் மூலம் கிராமப்புறத்தில் நிறைய பேருக்கு வேலை கிடைக்கவும் வாய்ப்பு உள்ளது.

தென்னை மரங்களுக்கு கோகோ ஊடு பயிர் பயன்கள்


தென்னை மரங்களுக்கு இடையே கோகோ மரம் ஊடு பயிர் பற்றிய இடவை .
மக்கள் டிவியில் தினமும் வரும் மலரும பூமி நிகழ்ச்சியில் இதனால் கிடைக்கும் பலன்களையும், பயன் படுத்தும் விவசாயிகளின் அனுபவங்களையும் காட்டுகிறார்கள்.
இதோ, இதை பற்றிய இன்னொரு செய்தி:
தென்னையில் கோகோ ஊடுபயிராக சாகுபடி செய்தால் ஒரு ஹெக்டருக்கு ஆண்டுக்கு 1.65 லட்சம் ரூபாய் கூடுதல் வருமானம் கிடைக்கும் என்று ஆழியாறில் நடந்த விழாவில் தெரிவிக்கப்பட்டது.
தமிழ்நாடு வேளாண் பல்கலைகழகம், காட்பரி நிறுவனம் இணைந்து ஆழியாறு நகர் தென்னை ஆராய்ச்சி நிலையத்தில், தமிழகத்தில் நிலையான கோகோ சாகுபடி உற்பத்தி திட்டத்தை துவங்கியது.
தமிழ்நாடு வேளாண் பல்கலை தோட்டக்கலை கல்லூரி முதல்வர் குமார் தலைமை வகித்து பேசும்போது, “கோகோ சாகுபடி மூலம் தென்னை விவசாயிகளுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும் நிலை உருவாகியுள்ளது. இது பற்றியும், அதன் தன்மை, செயல்பாட்டை ஆராய்வதற்கு ஆழியாறு தென்னை ஆராய்ச்சி நிலையம் சிறந்து இடமாக இருக்கும்என்றார்.
தென்னை ஆராய்ச்சி நிலைய தலைவர் மற்றும் பேராசிரியர் ராஜமாணிக்கம், தென்னை சாகுபடியில் ஏற்படும் இழப்புகளை தவிர்க்க கோகோ ஊடுபயிராக சாகுபடி செய்ய வேண்டும் என்று பேசினார்.காட்பரி நிறுவனத்தின் அறிவுரையாளர் பெல்லி பேசும்போது, கோகோவுக்கு சிறந்து சந்தை வாய்ப்பு உள்ளது. ஊடுபயிராக கோகோ பயிரிட்டால் ஒரு ஹெக்டருக்கு குறைந்தபட்சம் 1.65 லட்சம் ரூபாய் கூடுதல் வருவாய் கிடைக்கும். அதனால் தென்னை விவசாயிகள் கோகோ சாகுபடி திட்டத்தை துவங்க வேண்டும் என்றார்.
தோட்டக்கலைக்கல்லூரி வாசனை மற்றும் மலைப்பயிர் துறை தலைவர் ஜான்சிராணி பேசும்போது, கோகோ ஊடுபயிர் செய்வதன் மூலம் தென்னைக்கு சிறந்த இயற்கை உரம் கிடைக்கிறது. ‘ என்றார்.

இயற்கை உர வகைகளும் தயாரிக்கும் முறையையும்

வயல்களில் தொடர்ந்து ரசாயன உரங்களை அதிகம் போட்டு வருவதாலும், பூச்சிகொல்லி மருந்துகளை அதிகம் பயன்படுத்துவதாலும் மண் வளம் குறைகிறது. நஞ்சு கலந்த உணவைப் பெற வேண்டி உள்ளது. ரசாயன உரங்களால் வயல்கள் பாதிக்கப்படுவதுடன் சுற்றுச்சூழலும் மாசுபடுகிறது.
எனவே ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் ஆகியவற்றைத் தவிர்த்து,  இயற்கை வழி வேளாண்மையைக் கடைப்பிடிக்க வேண்டியதன் அவசியம் உருவாகி உள்ளது.
நீர் வளங்களைப் பாதுகாத்து மாசற்ற நீரைத் தக்க வைத்தல், இயற்கைச் சூழல் மாசுபடாமல் காத்தல், உணவு நஞ்சாவதைத் தடுத்து உயிரினங்களைப் பாதுகாத்தல், மண்ணின் மலட்டுத் தன்மையை நீக்கி பொன் விளையும் பூமியாக மாற்றுதல், சுற்றுச்சூழலுக்கும், உயிரினங்களுக்கும் கேடு ஏற்டாமல் தடுத்து, ரசாயன உரங்களைத் தவிர்த்து சாகுபடி செய்வதே இயற்கை வளாண்மை ஆகும்.
இயற்கை வழி வேளாண்மைக்கு மிகவும் அவசியமான இயற்கை உரங்கள் வ கையையும், அவற்றைத் தயாரிக்கும் முறையையும் காண்போம்.

கம்போஸ்ட் உரம்: பண்ணைக் கழிவுகளில் இருந்தும், இலை, சருகு மற்றும் குப்பைகளில் இருந்தும் புளுரோட்டஸ் என்னும் காளான் வித்துகளைப் பயன்படுத்தி, ஒரு மாதத்துக்குள் மக்க வைத்து இந்த உரம் தயாரிக்கப்படுகிறது.

தென்னை நார் கம்போஸ்ட் உரம்: தென்னை நார்களில் 50 சதவீதத்திற்கு மேல் லிக்னின் மற்றும் செல்லுலோஸ் உள்ளது. தென்னை நார்களுடன் புளுரோட்டஸ் காளான் வகையைச் சேர்த்து மக்க வைத்து இந்த வகை உரம் தயாரிக்கப்படுகிறது.

தொழு உரம்: இரு மாடுகள் வைத்திருக்கும் விவசாயி, ஓராண்டில் 6 டன் தொழு உரம் தயாரிக்கலாம். மாட்டுச் சாணத்தை விட மாட்டின் சிறுநீரில்தான் தழைச்சத்து அதிகம் உள்ளது. எனவே மாட்டுக் கொட்டகையில் மண் பரப்பி, மாடுகள் தின்று  கழித்த வைக்கோலை அதில் பரப்பி, அவற்றில் மாட்டை சிறுநீர் கழிக்கும்படி செய்து, அதைச் சேகரித்து மக்க வைத்து இந்த வகை உரம் தயாரிக்கப்படுகிறது.

பிண்ணாக்கு உரம்: ஆமணக்கு, நிலக்கடலை, எள், பருத்தி, தேங்காய், புங்கன், இலுப்பை, வேப்பங்கொட்டை ஆகியவற்றில் இருந்து தயாரிக்கப்டும் பிண்ணாக்குகளைக் கொண்டு இந்த வகை உரம் தயாரிக்கப்படுகிறது.

பசுந்தாள் உரம்: தக்கைப் பூண்டு, சணப்பு, கொழுஞ்சி, மணிலா, அகத்தி,நரிப்பயறு முதலியவற்றைப் பயன்படுத்தியும், மரம், செடி, கொடி ஆகியவற்றின் தழை களைப் பயன்படுத்தியும் இந்த வகை உரம் தயாரிக்கப்படுகிறது. இந்த உரம் தழைச் சத்தாகவும், மக்குச் சத்தாகவும் பயன் ஆகி, நுண்ணுயிர்களைச் செயல் திறன் பெறச் செய்கிறது.

மண்புழு உரம்: ஆடு, மாடு கழிவுகள் மற்றும் வீடு, தோட்டக் கழிவுகளை பள்ளத்தில் குவித்து, அதில் மண் புழுக்களை இட்டு மக்கச்செய்து இந்த உரம் தயாரிக்கப்படுகிறது. இந்த வகை உரத்தால் பயிர்களுக்கு தழை, மணி, சாம்பல், மெக்னீசியம், இரும்பு, துத்தநாகம், தாமிரம், கந்தகம் போன்ற உலோகச் சத்துகளும் கிடைக்கின்றன. பயிர் சாகுபடி வரையிலும் இந்த சத்துகள் பயன்படுகின்றன. இதுதவிர பயிர் வளர்ச்சிக்குத் தேவையான ஜிம்ரலின், சைட்டோகனிஸ் ஆகிய வளர்ச்சி ஊக்கிகளும் கிடைக்கின்றன.

செறிவூட்டப்பட்ட கம்போஸ்ட் தொழு உரம் தயாரிப்பது எப்படி?


செறிவூட்டப்பட்ட கம்போஸ்ட் தொழு உரத்தைத் தயாரித்து பயன்படுத்துவதன் மூலம் மண் வளத்தை அதிகப்படுத்துவதுடன், இடுபொருள் செலவையும் குறைக்கலாம்.
விவசாய உற்பத்தியில் முக்கிய பங்கு வகிப்பது உரம் ஆகும். நாளுக்கு நாள் உரத்தின் தேவை அதிகரித்து வருகிறது. மேலும் கனிம உரங்களின் பயன்பாடு போதிய அளவில் இருந்த போதும் பயிர்களின் உற்பத்தித் திறன் அதிகரிக்கவில்லை. இதற்கு முக்கிய காரணம் இயற்கை உரங்களை நிலத்தில் இடாததும், உரங்களின் பயன்பாட்டுத் திறனை அதிகரிக்காததுமே ஆகும்.
இந்திய உழவர் உரக்கூட்டுறவு நிறுவனம் (இப்கோ) விவசாயிகள் மத்தியில் இது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.

தொழு உரம் தயாரிப்பு முறைகள்

தேவையான பொருள்கள்:

பண்ணைக்கழிவு

250 கிலோ

மாட்டுச்சாணம்
250 கிலோ
டிஏபி உரம்
25 கிலோ
இப்கோ 20:20 உரம் (டிஏபி இல்லை என்றால்)
40 கிலோ
ராக் பாஸ்பேட்
140 கிலோ
ஜிப்சம்
100 கிலோ

யூரியா

5.5 கிலோ

அசோஸ்பைரில்லம்
1 கிலோ
பாஸ்போபேக்டிரீயா
1 கிலோ

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

தயாரிப்பு முறை:

கம்போஸ்ட் தயாரிக்க 10 அடி நீளமும் 5 அடி அகலமும் 3 அடி ஆழமும் உள்ள குழியை, சூரிய வெளிச்சம் படும் மேடான இடத்தில் தேர்வு செய்ய வேண்டும்.
சோகைத்தாள் மற்றும் பண்ணைக்கழிவுகள் 250 கிலோ மற்றும் சாணம் 250 கிலோ சேகரிக்கவேண்டும். அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போபேக்டீரியம் ஆகியவற்றை பசும் சாணக்கரைசலுடன் கலக்க வேண்டும்.
குழியில் ஒரு வரிசை பண்ணைக்கழிவுகள் இட்டு அதன்மேல் டிஏபி, யூரியா மற்றும் ஜிப்சம் ஆகியவற்றை பரப்பி அதற்கு மேல் பசும் சாணக்கரைசலை ஊற்றி மூடுமளவு மண்ணைப் பரப்ப வேண்டும்.

இதுபோன்று 16 வரிசைகள் இட்டு 3 அடி ஆழ குழியை நிரப்பி மேலாக கெட்டியான சாணக்கரைசல் கொண்டு மூடவேண்டும்.
மழை மற்றும் காற்றில் இருந்து பாதுகாக்க குழியை பாலித்தீன் தாள் கொண்டு மூட வேண்டும். ஈரத்தன்மையை நீட்டிப்பதற்கு இரண்டு முதல் நான்கு இடங்களில் குழாய் வழியாக தண்ணீர் ஊற்றி ஊறச்செய்யவேண்டும்.
110 நாள்கள் கழிந்து மக்கியுள்ள இந்த உரத்தை எடுத்து வயலுக்கு இடலாம். செறிவூட்டப்பட்ட இந்த தொழு உரத்தில்
  • 1.5 முதல் 2.5 சதவீதம் தழைச்சத்து,
  • 3.4 முதல் 4.2 சதவீதம் மணிச்சத்து மற்றும் சுண்ணாம்பு, கந்தகச் சத்துகள்
அடங்கி இருக்கும்.

தொழு உரத்தின் பயன்கள்:

தழை, மணி, கந்தகம் மற்றும் சுண்ணாம்பு சத்துகளை கூடுதலாகத் தருகிறது.
மண் உள்ள மணிச்சத்தை பயிருக்கு கிடைக்க வழிவகை செய்கிறது. மண் வளத்தை அதிகப்படுத்தி அங்கக சத்தைக் கூட்டுகிறது. கனிம வளங்களின் பயன்பாட்டுத் திறனை அதிகரிக்கிறது. மண்ணின் ஈரத்தன்மையைக் காக்கிறது. மானாவாரி நிலங்களுக்கு மிகவும் ஏற்றது.
பண்ணைக்கழிவு
250 கிலோ






தசகாவ்யா தயாரிப்பு முறை

தசகாவ்யாஒரு அங்கக தயாரிப்பு.
இதில் பத்து வகையான பொருட்கள் சேர்க்கப்பட்டுள்ளன.“காவ்யாஎன்பது மாட்டினுடைய பொருட்களைக் குறைக்கும். இதில் மாட்டு சாணம், மாட்டு சிறுநீர், மாட்டுப்பால், தயிர் மற்றும் நெய், இவைகள் உள்ளன.
இதனை பக்குவமாகக் கலந்து செடிகளுக்கு இட்டால் அதன் வளர்ச்சி அதிகமாக இருக்கும்.
வெப்பமண்டலப் பகுதிகளில் உள்ள செடிகளுக்கு தசகாவ்யாவை பரிந்துரைக்கப்பட்டுள்ளது.அவை வேம்பு(அசாடிரக்ட்டா இன்டிகா), எருக்கம் (கேலோடிராபிஸ்), கொலின்ஜி (டெப்ரோசியா பர்ப்யூரியா), நொச்சி (விட்டெக்ஸ் நெகுண்டோ), உமதை (டட்டுரா மிட்டல்), காட்டாமணக்கு (ஜட்ரோபா கர்கஸ்), அடத்தோடா (அடத்தோடா வேசிகா) மற்றும் புங்கம் (பொங்கேமியா பின்னட்டா),
இதனை பூச்சி மற்றும் நோய் தாக்குதலுக்கு எதிராக செயலாறு இயக்கியாகப் பயன்படுகின்றது.
  • தாவர வடிசாரை தயாரிக்க தனியாக மாட்டு சிறுநீர் 1:1 விகிதத்தில் (1கிலோ நறுக்கிய இலைகள் – 1 லிட்டர் மாட்டு நீரில்) தழைகளை முக்கி 10 நாட்களுக்கு முக்கி வைக்கவும்.
  • வடிகட்டிய அனைத்து வகையான தாவர சாரை ஒவ்வொரு 5 லிட்டர் பஞ்சகாவ்யா கரைசலில் 1 லிட்டர் என்ற அளவில் சேர்க்கவும்.
  • இந்தக் கரைசலை 25 நாட்களுக்கு வைத்து நன்றாகக் குலுக்கவும்.
  • அந்த நேரத்தில் பஞ்சகாவ்யா மற்றும் தாவர வடிசாரை நன்றாகக் கலக்கவும்.

பயன்படுத்தும் முறை
  • தசகாவ்யா கரைசலை வடிகட்டவும்.இல்லையெனில் தெளிப்பானின் நுனியில் அடைப்பு ஏற்படும்.
  • 3% தழை தெளிப்பானாக பரிந்துரைக்கப்ட்டது.
  • செடியை நடவு செய்வதற்கு முன் 3% தசகாவ்யா கரைசலில் விதைகள் அல்லது நாற்றுகளின் வேர்களை 20 நிமிடங்கள் முக்கி வைத்தால் விதை வளர்ச்சி மற்றும் வேர் உருவாகுதல் அதிகமாக இருக்கும்.
  • அனைத்து காய்கறிகள் மற்றும் தோட்டப்பயிர்கள் வளரும் போது வாரம் ஒரு முறை தெளிக்க வேண்டும்.
நன்மைகள்
  • செடியின் வளர்ச்சி, மகசூல் மற்றும் பயிரின் தரம் அதிகமாகும்.
  • அசுவுணி, செடிப்பேன், சிலந்தி மற்றும் இதர உறிஞ்சும் பூச்சிகளைக் கட்டுப்படுத்த உதவும்.
  • இலைப்புள்ளிகள், இலைக்க கருகல், சாம்பல் நோய் ஆகிய நோய்களைக் கட்டுப்படுத்த உதவும்.
  • குன்றுகளில் இருக்கும் பயிர்களில் உள்ள பூச்சி மற்றும் நோய் தாக்குதலுக்காக
தசகாவ்யாவின் பயன்கள்

ரோஜா: 3% தசகாவ்யாவை ரோஜா செடியின் மேல் தெளித்தால் செடிப்பேன் மற்றும் சாம்பல் நோயைக் கட்டுப்படுத்த உதவும்.
ஜெர்பெரா: ஜெர்பெரா சாம்பல் நோயைக் கட்டுப்படுத்த தசகாவ்யாவை தழைத் தெளிப்பாக தெளிக்கவும்.
தேயிலை: 15 நாட்கள் இடைவெளியில் 3% தசகாவ்யாவை தெளித்தால் கருகல் நோயிடம் இருந்து கட்டுப்படுத்தலாம்.
ஆதாரம்:
செல்வராஜ்.என்.பி.அனிதா, பி.அனுஷா மற்றும் எம்.குரு சரஸ்வதி 2007 அங்கக தோட்டக்கலை, தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், உதகை – 643 001