Wednesday 1 February 2012

தென்னை மரங்களுக்கு கோகோ ஊடு பயிர் பயன்கள்


தென்னை மரங்களுக்கு இடையே கோகோ மரம் ஊடு பயிர் பற்றிய இடவை .
மக்கள் டிவியில் தினமும் வரும் மலரும பூமி நிகழ்ச்சியில் இதனால் கிடைக்கும் பலன்களையும், பயன் படுத்தும் விவசாயிகளின் அனுபவங்களையும் காட்டுகிறார்கள்.
இதோ, இதை பற்றிய இன்னொரு செய்தி:
தென்னையில் கோகோ ஊடுபயிராக சாகுபடி செய்தால் ஒரு ஹெக்டருக்கு ஆண்டுக்கு 1.65 லட்சம் ரூபாய் கூடுதல் வருமானம் கிடைக்கும் என்று ஆழியாறில் நடந்த விழாவில் தெரிவிக்கப்பட்டது.
தமிழ்நாடு வேளாண் பல்கலைகழகம், காட்பரி நிறுவனம் இணைந்து ஆழியாறு நகர் தென்னை ஆராய்ச்சி நிலையத்தில், தமிழகத்தில் நிலையான கோகோ சாகுபடி உற்பத்தி திட்டத்தை துவங்கியது.
தமிழ்நாடு வேளாண் பல்கலை தோட்டக்கலை கல்லூரி முதல்வர் குமார் தலைமை வகித்து பேசும்போது, “கோகோ சாகுபடி மூலம் தென்னை விவசாயிகளுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும் நிலை உருவாகியுள்ளது. இது பற்றியும், அதன் தன்மை, செயல்பாட்டை ஆராய்வதற்கு ஆழியாறு தென்னை ஆராய்ச்சி நிலையம் சிறந்து இடமாக இருக்கும்என்றார்.
தென்னை ஆராய்ச்சி நிலைய தலைவர் மற்றும் பேராசிரியர் ராஜமாணிக்கம், தென்னை சாகுபடியில் ஏற்படும் இழப்புகளை தவிர்க்க கோகோ ஊடுபயிராக சாகுபடி செய்ய வேண்டும் என்று பேசினார்.காட்பரி நிறுவனத்தின் அறிவுரையாளர் பெல்லி பேசும்போது, கோகோவுக்கு சிறந்து சந்தை வாய்ப்பு உள்ளது. ஊடுபயிராக கோகோ பயிரிட்டால் ஒரு ஹெக்டருக்கு குறைந்தபட்சம் 1.65 லட்சம் ரூபாய் கூடுதல் வருவாய் கிடைக்கும். அதனால் தென்னை விவசாயிகள் கோகோ சாகுபடி திட்டத்தை துவங்க வேண்டும் என்றார்.
தோட்டக்கலைக்கல்லூரி வாசனை மற்றும் மலைப்பயிர் துறை தலைவர் ஜான்சிராணி பேசும்போது, கோகோ ஊடுபயிர் செய்வதன் மூலம் தென்னைக்கு சிறந்த இயற்கை உரம் கிடைக்கிறது. ‘ என்றார்.

No comments:

Post a Comment