நெல்லின் நீர்பாசனத் தொழில் நுட்பம்
நடவு நீர்ப்பிடிப்பு பகுதியிலிருந்து நீர் வெளியேற்றப்பட்ட 25 நாளிலிருந்து 65 நாள் வரை (40 நாட்கள்) செய்யப்படுகிறது. முதல் 25 நாட்கள் நாற்றாங்கால் தயார் செய்யப் பயன்படுத்தப்படுகிறது.
சமூகப் பொருளாதார குறைபாடுகளால், வெவ்வேறு பாசனப் பகுதிப் பிரிவுகளில் செய்ய ஏற்படும் தாமதத்தை குறைக்க உழவு இயந்திரங்கள் சேற்று உழவு மற்றும் இடுபொருட்கள் இடுதல் போன்றவற்றை உடனடியாகக் கிடைக்க வழிவகைகள் செய்யவேண்டும்.
வயல்களில் உள்பகுதியில் சிறிற வரப்புகளை அமைப்பதால் 20-25 சத நீரைச் சேமிக்கலாம்.
நீர் வயல்களில் உறிஞ்சப்பட்டு கீழ்நோக்கிச் செல்வதால் ஏற்படும் இழப்பில் 25 சதவிகிதத்தை டிராக்டர் இணைப்பு கேஜ்வீல் அல்லது உருளை மூலம் குறைக்கமுடியும்.
வயல்வெளிப் பாசனக் கட்டமைக்களின் மூலம் 15-30 சத நீரைச் சேமிக்க முடியும்.
No comments:
Post a Comment