காளான் வளர்ப்பு
வேளாண்மைக்கு
இணை தொழில் காளான் வளர்ப்பு. வேளாண்மை செய்யாத காலங்களில் காளான்
வளர்த்தும் வருமானம் பார்க்கலாம். சிப்பி காளான் வளர்க்க பத்து அடி
அகலம், இருபது அடி நீளம், ஆறு அடி உயரத்தில் குடிசை அமைக்கவேண்டும்.
தரையில் சிமென்ட் தளம் அமைத்து அதன் மேல் ஒரு அடி உயரத்துக்கு ஆற்று மணலை
நிரப்ப வேண்டும். இதன் மூலம் ஈரப்பதம் சீராக இருக்கும். கரியமில வாயு
அடர்தியாகமல் காற்று ஓட்டத்தை பராமரிக்க வேண்டும்.
அறை
தயாரானதும் காளான் படுகைகளை தயார் செய்யவேண்டும்.காய்ந்த வைக்கோல்கலை
துண்டுகளாக்கி உளற வைக்கவேண்டும். இதை பிளாஸ்டிக் பைகளில் ஒரு சுற்று
வைக்கோல் அதற்கு மேல் காளான் விதை என மாற்றி மாற்றி உருளை வடிவ படுகைகளை
தயார் செய்ய வேண்டும்.ஒரு படுக்கைக்கு இருநூறு கிராம் விதை, மூன்று கிலோ
வைக்கோல் தேவை.
ஒரு அறையில் நானூற்றி ஐம்பது
படுகைகள் வரை தொங்கவிடலாம். மொத்தமாக படுக்கைகளை தாயரிக்காமல்
நாளொன்றுக்கு பத்து படுகைகள் தயாரிக்கவேண்டும். அப்போதுதான் சுழற்சி
முறையில் காளான் மகசூல் கிடைக்கும். படுகைகளில் பென்சில் அளவில்
பன்னிரண்டு ஓட்டைகள் ௦போடவேண்டும். தினமும் தண்ணீர் தெளித்து வந்தால்,
பதினெட்டாம் நாளிலிருந்து மொட்டு வரும். 22௦ ஆம் நாளில் அறுவடை செய்யலாம்.
ஒரு படுகையின் ஆயுள் 60 நாட்கள்.
மாதம் 10ஆயிரம் ரூபாய் வருமானம் பார்க்க முடியும்.
செலவு ரூபாயில் = குடிசைக்கு
20௦ஆயிரம், விதைபுட்டி = 7 ,500 , வைக்கோல் =ஆயிரம் பிளாஸ்டிக் பை= 450 ,
கயிறு =200 ,நூல் =20௦ பேக்கிங் பை = 200 . மொத்தம் =30 ஆயிரம் மட்டுமே.
No comments:
Post a Comment