Wednesday, 1 February 2012

இயற்கை உரம்


இயற்கை உரம்:

இயற்கை உரம் என்பது தாவர மற்றும் விலங்குகளின் கழிவுகளிலிருந்து கிடைக்கும் ஊட்டச்சத்தின் மூலம் தயாரிக்கப்படுகிறது. சிதைவுறுதலுக்கு பிறகு ஊட்டச்சத்துக்கள் வெளிவருகின்றன. பயிரின் உற்பத்தித் திறனை மேம்படுத்துவதற்காக விலங்குகள், மனிதன் மற்றும் காய்கறிகளின் கழிவுகளைப் பயன்படுத்துதல் மற்றும் சேகரித்தல் என்பது வேளாண்மையில் தொன்று தொட்டு வழக்கத்தில் இருக்கிறது. அங்கக படிவங்களிலுள்ள தாவர ஊட்டச் சத்துக்களை உள்ளடக்கிய விலங்குகள், தாவரம், மற்றும் மனிதக் கழிவுகளிலிருந்து பெறப்பட்ட அங்ககப் பொருள்களே இயற்கை உரம் அல்லது எருவாகும், இயற்கையாக இருக்கக் கூடிய அல்லது செயற்கையான வேதிப்பொருள்களை உள்ளடக்கிய ஊட்டச்சத்துக்களை செயற்கை உரங்கள் என்று அழைக்கிறோம். குறைவான ஊட்டச்சத்துடைய இயற்கை உரம், அதிக அளவு எச்சப்பயனை உள்ளடக்கியது. அதிக ஊட்டச்சத்துக் கொண்ட செயற்கை உரங்களைக் காட்டிலும் இது மண்ணின் இயல்  குணங்களை மேம்படுத்துகிறது.

இயற்கை உரத்தின் முக்கியமான ஆதாரங்கள்:
  1. கால்நடைத் தொழுவத்தின் கழிவுகள் - சாணம், சிறுநீர், சாண எரிவாயுக் கலத்தில் உள்ள சேற்றுக் குழம்பு.
  2. மனிதன் வாழும் இடங்களில் இருந்து வரும் கழிவுகள் - மலக்கழிவு, சிறுநீர், நகரக் கழிவுகள், கழிவு நீர், சாக்கடைக் கழிவு, கழிவுப் படிமம்.
  3. கோழிப்பண்ணைக் குப்பை, ஆடு, மாடுகளின் கழிவுகள்
  4. இறைச்சி வெட்டுமிடத்தில் உள்ள கழிவுகள் - எலும்பு எரு, மாமிஸ எரு, இரத்தக் குருதி எரு, கொம்பு மற்றும் குளம்பு எரு, மீனின் கழிவுகள்.
  5. வேளாண் தொழில் துறையினுடைய துணைப் பொருட்கள் – எண்ணெய் பிண்ணாக்கு, கரும்புச் சக்கை, மற்றும் சர்க்கரை ஆலைக் கழிவு, பழ மற்றும் காய்கறி பதப்படுத்துவதிலிருந்து வரக்கூடிய கழிவுகள் மற்றும் இன்ன பிற பொருட்கள்
  6. பயிர் கழிவுகள் - கரும்புச் சருகு, பயிர்த்தூர் மற்றும் இதர பொருட்கள்
  7. வெங்காயத் தாமரை, களைகள், நீர்த் தொட்டியின் படிவுகள்
  8. பசுந்தாள் உரப் பயிர்கள் மற்றும் பசுந்தழை உரப் பொருட்கள்
இயற்கை உரங்களை, பருமனனான அங்கக உரங்கள் மற்றும் அடர்த்தியுடைய அங்கக உரங்களாக ஊட்டச்சத்தின் அடர்த்தியைப் பொருத்து வகைப்படுத்தலாம்.
பருமனனான அங்ககப் பொருட்கள்:
பருமனனான அங்ககப் பொருட்கள் குறைவான சதவீதம் கொண்ட ஊட்டச்சத்துக்களை உள்ளடக்கியது மற்றும் அதிக அளவில் பயிர்களுக்கு இட வேண்டும். பண்ணை உரம், மட்கிய உரம், பசுந்தாள் உரங்கள் பருமனனான அங்ககப் பொருட்களின் ஆதாரங்கள் ஆகும். இதைப் பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள்:
  1. நுண் ஊட்டச்சத்துக்களை உள்ளடக்கிய தாவர ஊட்டச் சத்துக்களை வழங்குகிறது.
  2. மண் இயல் நிலைக் குணங்களான மண் அமைப்பு, நீர் பிடிப்புக் கொள்ளளவு மற்றும் பல குணங்களை மேம்படுத்துகிறது.
  3. சிதைவுறுத்தலின் போது கரியமிலவாயுவை வெளிவிடுவதால் கரியமில உரமாகச் செயல்படுகிறது.
  4. பயிர் ஒட்டுண்ணி நூற்புழுக்கள் மற்றும் பூஞ்சான்கள் ஓரளவிற்கு கட்டுப்படுத்துகிறது. மண்ணிலுள்ள நுண்ணுயிர்களின் அளவை மாற்றுவதால் அதைக் கட்டுப்படுத்தலாம்.
பண்ணை உரம்:
பண்ணை விலங்குகளுடைய சாணம் மற்றும் சிறுநீர், பண்ணைக் குப்பை மற்றும் கால்நடைத் தீவனக் குப்பைகளின் சிதைக்கப்பட்ட கலவை தான் பண்ணை உரமாகும். சராசரியாக, சிதைக்கப்பட்ட பண்ணை எருவில் தழைச்சத்து 0.5 சதவீதம், 0.2 சதவீதம் மணிச்சத்து, 0.5 சதவீதம் சாம்பல் சத்தும் உள்ளது. தற்போது விவசாயிகளால் தயாரிக்கப்படும் பண்ணை உர முறை தவறானது. சிறுநீரில் 1 சதவீதம் தழைச்சத்து, 1.35 சதவீதம் சாம்பல் சத்தும் உள்ளது. சிறுநீரில் இருக்கக் கூடிய நைட்ரஜன் யூரியா படிவத்தில் இருக்கும். இதுவும் ஆவியாதல் மூலம் இழப்பை ஏற்படுத்தும். சேமிப்பின் போது கூட ஊட்டச்சத்துக்கள் அரிப்பு மற்றும் ஆவியாதல் மூலம் இழக்கப்படுகிறது. எப்படி இருந்தாலும் இழப்பை தவிர்ப்பது செயல்முறையில் முடியாத ஒன்றாகும். ஆனால் பண்ணை உரத்தைத் தயாரிக்கும் முறையை மேம்படுத்துவதால் இந்த இழப்பைக் குறைக்கலாம். குழிகளின் நீளம் 6மீ - 7.5மீ அளவும், 1.5மீ - 2மீ அகலமும், 1மீ ஆழத்துடன் தோண்ட வேண்டும்.
கிடைக்கக்கூடிய குப்பை மற்றும் கூளங்களை மண்ணுடன் கலந்து சிறுநீரை உறிஞ்சிக் கொள்வதற்காக தொழுவத்தில் பரப்பி வைக்க வேண்டும். அடுத்த நாள் காலையில் சிறுநீரில் ஊறிய குப்பைக் கூளங்களை சாணத்துடன் சேர்த்து, குழிகளில் இடவேண்டும். தினமும் இந்த மாதிரி செய்வதற்கு குழியின் ஓர் ஓரத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். குழியின் ஒரு பகுதி தரைமட்டத்திற்கு மேல் 45செ.மீ - 60செ.மீ அளவு வரும் வரை நிறைக்க வேண்டும்.
குவியலுடைய மேல்பகுதி கோபுரம் மாதிரி ஆகும் வரை நிறைக்க வேண்டும். பின் சேற்று மண் குழம்பு சாணத்துடன் குவியலை பூச வேண்டும், தொடர்ந்து இதே மாதிரி செய்ய வேண்டும். முதல் குழி முழுவதுமாக நிறையும் பொழுது, இரண்டாவது குழியை தயார் செய்ய வேண்டும்.
காரைப் பூச்சுக்குப் பிறகு 4 மாதத்திலிருந்து 5 மாதத்திற்குள் எரு தயார் நிலைக்கு வரும். சிறுநீர் இந்தப் படுக்கையின் மீது சேர்க்காவிட்டால் மாட்டுத் தொழுவத்தில் உள்ள சிமெண்ட் குழியில் சேர்த்து வைத்த சிறுநீரை பண்ணை உரக் குழியில் பின்னர் சேர்க்க வேண்டும். பாதுகாப்பு வேதிப் பொருட்களைப் பயன்படுத்துவதால் இழப்பைக் குறைக்கலாம். இதனால் பண்ணை எருவையும் வளப்படுத்தலாம். பொதுவாக பயன்படுத்தப்படும் வேதிப் பொருட்கள் ஜிப்சம் மற்றும் சூப்பர் பாஸ்பேட். மாட்டுத் தொழுவத்தில் பரப்பப்பட்ட ஜிப்சம், சிறுநீரை உறிஞ்சி, சிறுநீரில் உள்ள யூரியா ஆவியாதலை தடுக்கிறது. மேலும் கால்சியம் மற்றும் கந்தகத்தை எருவில் சேர்க்கிறது. இது போலவே சூப்பர் பாஸ்பேட்டும் இழப்பைக் குறைத்து, பாஸ்பரஸின் அளவை அதிகப்படுத்துகிறது.
பகுதியாக மட்கிய பண்ணை உரம் விதைப்பதற்கு முன்பு மூன்றிலிருந்து நான்கு வாரங்களுக்குள் இடப்படுகிறது. நன்றாக மட்கிய உரத்தை விதைப்பதற்கு முன்பு உடனே இடுதல் வேண்டும். பொதுவாக ஒரு எக்டருக்கு 10 - 20 டன் அளவு தீவனப் புற்கள் மற்றும் காய்கறிகளுக்கு அளிக்கப்படுகிறது. இந்த நிலையில் பண்ணை உரம் 15 நாட்களுக்கு முன்னரே இடவேண்டும். இதனால் நைட்ரஜன் மண்ணில் கரையாமல் ஓர் இடத்திலேயே இருப்பதை தவிர்க்கலாம். எருவை சிறியக் குவியலாக, பரவலாக வயலில் நெடுநாள் வைத்திருக்கும் முறையில் ஊட்டச்சத்துக்களின் இழப்பு ஏற்படும். எருவை பரவலாக போடுவதாலும், மண்ணில் இட்டவுடனேயே உழவு செய்து கலப்பதாலும் இந்த இழப்புக்களைக் குறைக்கலாம்.
பண்ணை உரம் தயாரிக்க ஏற்ற பயிர்கள்: காய்கறிப் பயிர்களான உருளைக்கிழங்கு, தக்காளி, சர்க்கரை வள்ளிக் கிழங்கு, கேரட், முள்ளங்கி, வெங்காயம் மற்றும் பல. பண்ணை உரம் தயாரிக்க ஏற்ற மற்ற பயிர்கள்: கரும்பு, நெல், நேப்பியர் புல் மற்றும் பழப்பயிர்களான ஆரஞ்சு, வாழை, மா, தோட்டம் பயிர்களான தென்னை.
பண்ணை உரத்தில் உள்ள முழு ஊட்டச்சத்து உடனடியாக கிடைக்காது. 30 சதவீத தழைச்சத்து, 60 - 70 சதவீதம் மணிச்சத்து, 70 சதவீதம் சாம்பல் சத்து பயிருக்கு கிடைக்கும்.
செம்மறி மற்றும் வெள்ளாட்டு உரம்:
செம்மறி மற்றும் வெள்ளாட்டினுடைய எச்சங்களில் பண்ணை உரம் மற்றும் மட்கிய உரங்களில் உள்ள ஊட்டச்சத்தை விட அதிக ஊட்டச்சத்து உள்ளது. சராசரியாக, இந்த உரத்தில் 3 சதவீத தழைச்சத்து, 1 சதவீதம் மணிச்சத்து, 2 சதவீதம் சாம்பல் சத்து இருக்கிறது. செம்மறி அல்லது வெள்ளாடுகளின் தொழுவத்தின் உடைய குப்பைக் கூளங்களை சிதைவுறுவதற்காக குழிகளில் போட வேண்டும். பின் வயலில் இட வேண்டும். இந்த முறையில் சிறுநீரில் உள்ள ஊட்டங்கள் வீணாகப் போகின்றது. இரண்டாவது முறை ஆடுகளை வேலி போட்டு வயலில் அடைத்து வைத்தல். இந்த முறையில் ஆடுகள் வயலில் இரவு முழுவதும் அடைத்து வைக்க வேண்டும். மண்ணில் சேர்க்கப்பட்ட சிறுநீர் மற்றும் ஆட்டுக் கழிவுகளை கொத்துக் கலப்பை அல்லது சிறுகலப்பை கொண்டு சிறிது ஆழத்திற்கு உழுது விட வேண்டும்.

கோழிப்பண்ணை உரம்:
பறவைகளின் எச்சக் கழிவுகள் விரைவாக சிதைவுறும். திறந்த நிலையில் இந்தக் கழிவுகளை வைத்திருந்தால் 30 நாட்களுக்குள் 50 சதவீத தழைச்சத்து இழப்பு ஏற்படும். கோழிப் பண்ணை உரத்தில் தழைச்சத்து மற்றும் மணிச்சத்து, மற்ற எருக்களைக் காட்டிலும் அதிகளவு இருக்கிறது. கோழிப் பண்ணை உரத்தில் உள்ள சராசரியான ஊட்ட அளவு - 3.03 சதவீதம் சாம்பல் சத்து.
செறிவூட்டப்பட்ட அங்கக உரங்கள்:
இதில் பருமனான அங்கக உரத்தைக் காட்டிலும் அதிகளவு ஊட்டச்சத்துக்கள் உள்ளன. முக்கியமான செறிவூட்டப்பட்ட அங்கக உரங்கள் – எண்ணெய் பிண்ணாக்கு, இரத்தக் குருதி எரு, மீன் கழிவு எரு மற்றும் பல. இதை அங்கக தழைச்சத்து செயற்கை உரம் என்று அழைக்கிறோம். பயிர்களில் இந்த அங்கக தழைச்சத்து பயன்படுத்துவதற்கு முன்பு,  பயன்படுத்தக் கூடிய அம்மோனியம் கலந்த நைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜனேற்றம் செய்யப்பட்ட நைட்ரஜனாக மாற்றப்படுகிறது. இந்த அங்கக செயற்கை உரங்கள் மெதுவாக செயல்படும். ஆனால் நெடு நாட்களுக்கு தழைச்சத்தை பயிர்களுக்கு அளிக்கும்.

எண்ணெய் பிண்ணாக்கு:
எண்ணெய் வித்துக்களிலிருந்து எண்ணெய் எடுக்கப்பட்ட பிறகு உள்ள கெட்டியான பகுதியை காய வைக்க வேண்டும். பின் இந்தக் கட்டியை உரமாகப் பயன்படுத்தலாம். 2 வகையான பிண்ணாக்குகள் உள்ளன.
  1. உண்ணத் தகுந்த எண்ணெய் பிண்ணாக்கு:
இதை கால்நடைகளுக்கு உண்ணக் கொடுக்கலாம். உதாரணமான கடலைப் பிண்ணாக்கு, தேங்காய் கட்டி மற்றும் பல.
  1. உண்ணத்தகாத பிண்ணாக்கு:
இது கால்நடைகள் உண்ணத் தகுதியற்றவை. உதாரணமாக ஆமணக்கு கட்டி, வேப்பங்கட்டி, இலுப்பை கட்டி மற்றும் பல.
உண்ணத் தகுந்த மற்றும் உண்ணத் தகுதியற்ற பிண்ணாக்குகளை எருவாகப் பயன்படுத்தலாம். இருந்தாலும், உண்ண தகுந்த பிண்ணாக்குகளையும் உண்ணத் தகுதியற்ற பிண்ணாக்குகளையும் முக்கியமாக, தோட்டப் பயிர்களுக்குப் பயன்படுத்தலாம். எண்ணெய் பிண்ணாக்கில் இருக்கக் கூடிய ஊட்டச்சத்துக்கள் தாது ஏற்றத்திற்குப் பிறகு அளித்த 7 முதல் 10 நாட்களுக்குப் பிறகு பயிர்களுக்கு கிடைக்கும். பிண்ணாக்குகளை பயிர்களுக்கு அளிப்பதற்கு முன்பு பொடி செய்து அளிப்பதால், சமமாக பரவியும், எளிதாக சிதைவுறவும் செய்யும்.

பல தரப்பட்ட எண்ணெய் பிண்ணாக்கில் உள்ள ஊட்டச்சத்துக்களின் சராசரி அளவு:
எண்ணெய் பிண்ணாக்கிலுள்ள ஊட்டச்சத்துக்களின் சராசரி அளவு:
பிண்ணாக்குகள் ஊட்டச்சத்துக்களின் அளவு (சதவீதத்தில்)

தழைச் சத்து மணிச் சத்து சாம்பல் சத்து
உண்ணத் தகுதியற்ற பிண்ணாக்குகள் 4.3 1.8 1.3
பருத்தி விதைக் கட்டி (தோலுரிக்காதது) 3.9 1.8 1.6
புங்கக் கட்டி 3.9 0.9 1.2
இலுப்பைக் கட்டி 2.5 0.8 1.2
செந்தூரக் கட்டி (தோலுரிக்காதது) 4.9 1.4 1.2
உண்ணத் தகுதியுள்ள பிண்ணாக்குகள்
தேங்காய் கட்டி 3.0 1.9 1.8
பருத்தி விதை கட்டி (தோலுரித்தது) 6.4 2.9 2.2
நிலக்கடலைக் கட்டி 7.3 1.5 1.3
ஆளி விதைக் கட்டி 4.9 1.4 1.3
போயள் கட்டி 4.7 1.8 1.3
கடுகு விதைக் கட்டி 5.2 1.8 1.2
செந்தூரகக் கட்டி (தோலுரித்தது) 7.9 2.2 1.9
எள் கட்டி 6.2 2.0 1.2
மற்ற செறிவூட்டப்பட்ட அங்கக உரங்கள்:
இரத்தக் குருதி எருவை காய வைத்து, பொடி செய்து உரமாகப் பயன்படுத்தப்படுகிறது. இறந்த விலங்குகளின் இறைச்சி காய வைக்கப்பட்டு மாமிச உரமாக மாற்றப்படுகிறது. இது தழைச்சத்தின் நல்ல ஆதாரமாக விளங்குகிறது. விலங்குகளிலிருந்து கிடைக்கக்கூடிய செறிவூட்டப்பட்ட அங்கக உரங்களின் சராசரி ஊட்டச்சத்து அளவு பின் வருமாறு:

விலங்குகளிலிருந்து கிடைக்கக்கூடிய செறிவூட்டப்பட்ட அங்கக உரங்களின் சராசரி ஊட்டச்சத்து அளவு:
அங்கக உரங்கள் ஊட்டச்சத்துக்களின் அளவு (சதவீதத்தில்)

தழைச்சத்து மணிச் சத்து சாம்பல் சத்து
இரத்தக்குருதி உரம் 10 - 12 1 - 2 1.0
மாமிச உரம் 10.5 2.5 0.5
மீன் உரம் 4 - 10 3 - 9 0.3 - 1.5
கொம்பு மற்றும் குளம்பு உரம் 13 - -
பண்படாத எலும்பு உரம் 3 - 4 20 - 25 -
வெந்த எலும்பு உரம் 1 - 2 25 - 30 -

No comments:

Post a Comment